தமிழீழம் மலர பொதுவாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும்: மதிமுக

22.3.14

சென்னையில் மதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார். அதில் , தமிழீழம் மலர பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும்.
 இந்தியாவில் தூக்குத்தண்டனையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், மீனவர் பிரச்னையில் கடுமையான நடவடிக்கை எடுக்க போராடுவோம் என்றும் , மீனவர் நலனில் அக்கறை செலுத்தப்படும். காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் .

கூடங்குளத்தில் அணுஉலைகளை மூட வலியுறுத்தப்படும் என்றும் அங்கு மேலும் அணுஉலைகள் அமைக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :