ஜெனிவா தீர்மானம் வலுவற்றது- தமிழக முதல்வர் குற்றச்சாட்டு

25.3.14

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் வலுவற்றது என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமை பிரச்சனை 5 ஆண்டுகளாக தொடர்கிறது. அத்துடன் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் தமிழர் இலங்கையில் வசிக்கும் சூழல் உள்ளது. இன்நிலையில் அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதால் ஒரு நன்மையையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு நசுக்குகிறது. மீனவர் பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு துரோகம் செய்துவிட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 கருத்துக்கள் :