ஜனநாயகத்தின் மதிப்பைச் சீரழித்து விட்டது சிறிலங்கா அரசாங்கம் - சமந்தா பவர் குற்றச்சாட்டு

29.3.14

சிறிலங்கா அரசாங்கம் ஜனநாயகத்தின் மதிப்பைச் சீரழித்து விட்டதாக, ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக, அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவுகளிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானம், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று.
5 ஆண்டுகளுக்குப் பின்னரும், சிறிலங்கா அரசாங்கம் ஜனநாயகத்தின் மதிப்பைச் சீரழித்துள்ளதுடன், போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்கவும் மறுத்து வருகிறது.

பொறுப்புக்கூறலையும் தாமதப்படுத்தி வருகிறது“ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :