ஆட்கடத்தல் ,கொலைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் வடமாகாண முதலமைச்சரும் பங்கேற்பு

18.3.14

ஆட்­க­டத்தல், கொலைகள் மற்றும் கைது­க­ளுக்கு எதி­ராக வட­மா­காண சபை உறுப்­பி­னர்­களால் கண்­டன ஆர்ப்­பாட்டம் ஒன்று  யாழ்ப்பாணத்தில் இன்று   நடத்­தப்­பட்­டது.

கைத­டியில் உள்ள வட­மா­காண சபை பேரவை கட்­ட­டத்­திற்கு முன்­பாக இன்று இந்த ஆர்ப்­பாட்டம் இடம்­பெற்­றது. அண்­மையில் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தர்­ம­பு­ரத்தை சேர்ந்த பா.ஜெயக்­கு­மா­ரியின் விடு­த­லையை வலி­யு­றுத்­தியும் கோஷங்கள் எழுப்­பப்­பட்­டன.
 இந்த ஆர்ப்­பாட்­டத்தில் வட­மா­காண முத­ல­மைச்சர்  சி.வீ. விக்­னேஸ்­வரன் மற்றும் பேரவைத் தலைவர் உட்­பட மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

0 கருத்துக்கள் :