முரண்டு பிடித்தாலும் விசாரணையில் மாற்றமில்லை

31.3.14


இலங்கைக்கு வந்து விசாரணைகளை நடத்துவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு அனுமதி மறுக்கப்படுமானால், வெளிநாடுகளிலிருந்து இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் ஆணையாளர் அலுவலகம் விசாரணை மேற்கொள்ளும் என்று ஜெனிவா தரப்புக்கள் தெரிவித்துள்ளன இவ்வாறு கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் 2002 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையில் இடம்
இலங்கை பெற்ற பெரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள், போர்க் குற்றங்கள் தொடர்பில் பரந்தளவிலான விசாரணைகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மேற்கொள்வதற்கான அனுமதியை கடந்த வாரம் ஐ.நா மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் வழங்கியுள்ளது.

இந்த விசாரணைகளை மேற்கொள்வதற்காக இலங்கைக்கு வருவதற்கு, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் இலங்கையின் ஒத்துழைப்பைக் கோரும் என்று ஜெனிவா தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும் விசாரணை மேற்கொள்வதற்காக இலங்கைக்கு வருவதற்கு அனுமதியளிக்கப்படாதென்பதுடன், எந்த உதவிகளையும் இலங்கை அரசு வழங்காது என்று திட்டவட்டமாக இலங்கை அரசின் சார்பில் மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதனால் இலங்கை மீதான விசாரணைகள் கைவிடப்படமாட்டாது. வேறு நாடுகளிலிருந்து இந்த விசாரணைகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும். இதே போன்று ஏனைய நாடுகள் மீது மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் கடந்த காலத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது என்று அந்த ஜெனிவாத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச விசாரணைகள் மேற்கொள்வது, அரசுகளுக்கு நன்மைபயக்காது என்பதால், அரசுகளின் ஒத்துழைப்புக்களை இதில் பெற முடியாது என்றும் அந்தத் தரப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன என்று அந்த ஆங்கில ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

0 கருத்துக்கள் :