சிங்கப்பூரில் இந்தியருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு

3.3.14

சிங்கப்பூரில் வசித்த இந்திய வம்சாவளியான ராஜா ரத்தினம் 19 கிலோ போதைப்பொருள் கடத்தி விற்பனை செய்ததாக பிடிபட்டார். இந்த வழக்கில் கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து 2012ம் ஆண்டில் தாக்கல் செய்த அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதற்கிடையில் சிங்கப்பூரில் கடந்த ஆண்டில் மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு மரண தண்டனையில் இருந்து விதிவிலக்கு அளிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்தது.

இந்த புதிய சட்டத்தின் மூலம்  தினேஷ் பிள்ளைக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிபதி உத்தரவிட்டார். புதிய சட்டத்தின் கீழ் தண்டனை குறைப்பு பெற்ற முதல் நபர் இவரே ஆவார்.

0 கருத்துக்கள் :