மகளிர் தினத்தை முன்னிட்டு யாழில் ஊர்வலம்

9.3.14

மகளிர் தினத்தை ஒட்டி யாழ்.சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில்ஊர்வலம் ஒன்று நடைபெற்றது.
 "உரிமைகளும் மனித உரிமைகளே" என்ற தொனிப்பொருளில் நல்லூர் கந்தன் ஆலய முன்றலில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பித்த ஊர்வலமானது யாழ். மகளிர் கல்லூரியை வந்தடைந்தது.
மேலும் மகளிருக்கான கிரிக்கெட் உட்ளிட்ட மைதான விளையாட்டுக்களும் நடைபெற்றன.  இதேவேளை, இதற்கான நிகழ்வுகள் இன்று 2 மணிக்கு யாழ். மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளதுடன் இதற்காக சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் இமெல்டா மற்றும் யாழ். போதனாவைத்தியசாலைப் பணிப்பாளர் பவானி ஞானச்சந்திரமூர்த்தி ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.0 கருத்துக்கள் :