இலங்கைத் தீர்மான வாக்கெடுப்புக்கு தயாராகும் ஜெனிவா மனித உரிமைகள் சபை! பலத்த எதிர்பார்ப்பில் உலகம் (நேரடி ஒளிபரப்பு)

27.3.14

ஐ.நா மனித உரிமைகள் சபையில்; இலங்கை மீதான அமெரிக்கப் பிரேரனை மீதான வாகெடுப்பு நடைபெறவுள்ள இலங்கை அரசு மற்றும் தமிழர் தரப்புக்கள் பலத்த எதிர்பர்ப்பில் உள்ளதை அவதானிக்கக் கூடியதாய் உள்ளது.

இன்றைய நிலையில் 23 நாடுகள் அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், எதிராக 14 நாடுகளும், நடுநிலையாக 10 நாடுகளும் உள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடைபெறும் பிரதான மண்டபத்தில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிப்பதை அவதானிக்கக் கூடியதாயுள்ளது.

இலங்கை அரசின் பிரதிநிதிகள் மண்டபத்தின் பிரதான மண்டபத்தில் தீர்மான வாக்கெடுப்பை எதிர்பார்த்து காத்திருப்பதை அவதானிக்கக் கூடியதாயுள்ளதுடன், சில இலங்கை அரசின் பிரதிநிதிகள் சில நாட்டுப் பிரதிநிதிகளை சந்திப்பதை பார்க்கக் கூடியதாயுள்ளது.
இலங்கையில் இருந்து வந்திருக்கக் கூடிய அரசியல் தலைவர்களும், நாடுகளின் முக்கியஸ்தர்களை சந்தித்து உரையாடுவதை அவதானிக்கக் கூடியதாயுள்ளது.
மற்றும் அமெரிக்கப் பிரேரணை அதிகப்படியான வாக்குள் வித்தியாசத்தில் வெல்லப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா பிரித்தானியா உட்பட இன்னும் நாடுகளின் முக்கியஸ்தர்கள் ஏனைய நாடுகளைச் சந்திப்பதை அவதானிக்கக் கூடியதாயுள்ளது.
இவ் வாக்கெடுப்பில் இந்தியா உட்பட 25 நாடுகளின் ஆதரவு இலங்கை அரசிற்கு எதிரான பிரேரணைக்கு வழங்கப்படும் என டெல்லியில் இருந்து தமிழர் தரப்பிற்கு அவசர செய்தி பரிமாறப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.


இந்தியப் பிரதி நிதி வாக்கெடுப்பிற்கு முன்னர் உரையாடுவதை அவதானிக்கக் கூடியதாயுள்ளது.

0 கருத்துக்கள் :