சிறிலங்காவில் தண்டனை விதிக்கப்படுதல் முக்கியம் - வலியுறுத்துகிறது பிரான்ஸ்

8.3.14

மூதூரில் அக்சன் பெய்ம் நிறுவனத்தின் 17 தொண்டுப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு அது தொடர்பான உண்மை வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் நேற்றைய அமர்வில், பிரான்ஸ் வெளியிட்டு அறிக்கையில்,
“எல்லா இடங்களிலும் தண்டனையில் இருந்து தப்பித்தலுக்கு எதிரான போராட்டம் முக்கியமானது.
சிறிலங்காவில், தண்டனையில் இருந்து தப்பித்தலுக்கு எதிரான போராட்டம், தேசிய நல்லிணக்கத்துக்கு அவசியமானது.

இதற்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
நல்லிணக்க ஆணைக்குழுவின பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும், மனிதஉரிமை ஆர்வலர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டு வருமாறும் நாம் சிறிலங்கா அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறோம்.

இறுதியாக, ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், அக்சன் பெய்ம் பணியாளர்கள் 17 பேரின் கொடூரமான படுகொலைகள் குறித்து, சிறிலங்கா அரசாங்கம் விசாரணை நடத்தி, அதனை வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும்” என்றும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :