சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு அவுஸ்திரேலிய அரசிடம் பிரசித்திப்பெற்ற பிரஜைகள் அறுவர் கடிதம்

25.3.14

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் துஷ்பிரயோகங்கள் குறித்த சர்வதேச விசாரணையொன்றுக்கு ஆதரவளிக்குமாறு அவுஸ்ரேலிய வெளிநாட்டமைச்சர் ஜூலி பிஷப் வலியுறுத்தப்பட்டுள்ளதாக த சிட்னி மோர்னிங் ஹெரால்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது தென்சிலுவை பல்கலைக்கழக வேந்தரான ஜோன் டவுட் முன்னாள் வெளிநாட்டமைச்சர் கரெத் இவான்ஸ் முன்னாள் பிரதமர் மல்கம் பிரேசர் உள்ளிட்ட பிரசித்திப்பெற்ற  பிரஜைகள் அறுவர் இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் தொடர்ந்து சீர்கெட்டு வருவதைத் தெரிவித்து மேற்படி சர்வதேச விசாரணை குறித்த பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு அரசாங்கத்தை  வலியுறுத்தும் கடிதமொன்றை அமைச்சர் பிஷப்பிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் கலாசாரமொன்று பொது இடத்திலான சித்திரவதை பலவந்தப்படுத்தப்பட்ட நிலையில் காணாமற்போகுதல் மற்றும் பாலியல் வன்முறை ஆகியவற்றை ஊக்குவித்து வருவதாகவும் இந்தப்பிரேரணையானது இலங்கை பிரஜைகள் அனைவரிடமும் உண்மையாக தொடர்புப்பட்டதெனவும் இரு தரப்பினராலும் இழைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பத்தகுந்த வகையில் நடத்தப்படும் விசாரணை எதுவும் தத்தம் பெயர்களில் இழைக்கப்பட்ட குற்றச்செயல்கள் பற்றிய உண்மை நிலையை அறியவைக்கும் சூழ்நிலையை அனைத்து இலங்கை சமூகத்தினருக்கும் வழங்குமென்பதை சுட்டிவுரைத்துள்ள குறித்த கூட்டறிக்கை நடந்து முடிந்த யுத்தத்தின் போது இழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்செயல்களுக்கான அர்த்தப்புஷ்டியான உண்மைத்தன்மை நீதி மற்றும் பொறுப்புக்கூறும் கடப்பாடு ஆகியவை இன்றி நல்லிணக்கம் மற்றும் நிலையான சமாதானம் (அமைதிநிலை) ஆகியவற்றுக்கான பாதையில் பயணிப்பதற்கான உண்மையான வாய்ப்பு இலங்கைக்கு கிடைக்கவே கிடைக்காது எனவும்  மேலும் தெரிவித்துள்ளது.

இதேசமயம் அவுஸ்ரேலியா தனது வழமையான நட்பு நாடுகளுக்கு ஆதரவளிக்க வேண்டுமெனவும் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டு வந்த தேசிய நல்லிணக்கம் பொறிமுறைகள் இன்றுவரை வெற்றியளிக்காதவையாகவே இருந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ள வெளிவிவகாரங்களுக்கான எதிர்கட்சிப் பேச்சாளர் தன்யா பிலிபர் செக்கும் குறித்த சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு அவுஸ்ரேலிய அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக மேற்படி ஊடகம் தெரிவித்துள்ளது. இது குறித்து திருமதி. பிலிபெர்செச் மேலும் தெரிவிக்கையில் மனித உரிமைகள் பேரவையானது மீறல்களையும் துஷ்பிரயோகங்களையும் குறைப்பதற்கும் வெளிவிவகாரங்கள் குறித்த தீர்மானத்தை மேற்கொள்வதற்கென இந்த விடயம் பரசீலிக்கப்படும்போது எமது வழமையான நட்புறவு நாடுகளுடன் எம்மை கூட்டாக இணைப்பதற்குமான நடவடிக்கையை எடுப்பதற்கு முன்னரே குறித்த விரைவுப் பிரேரணைக்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டுமென்பதே எமது அழைப்பாகும் என குறிப்பிட்டார்.

கடந்த 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் ஆட்சியிலிருந்த தொழிற்கட்சி அரசாங்கம் இலங்கை அரசு தனது உள்ளக விசாரணையை நடத்துவதற்கான ஆதரவை வழங்கியிருந்தது. ஆயினும் வெளிவாரி விசாரணைக்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் ஆதரவளிக்காமல் இருக்கலாமென சூசகமாக தெரிவித்துள்ள லிபரல் கட்சியின் செனட்டர் மைக்கேல் சுப்கார் பொறுப்புக்கூறும் கடப்பாடு மற்றும் மனித உரிமைகளைப் பேணுவதிலான முன்னேற்றம் ஆகியவற்றை விருத்தி செய்வதில் அவுஸ்ரேலிய அரசாங்கம் இலங்கை அரசுடன் முன்னரிலும் பார்க்க நெருங்கிப் பணியாற்றுமெனவும் மேற்படி பிரேரணைக் குறித்த இறுதி மூலவாக்கு இன்னமும் அரசுக்கு கிடைக்கவில்லையெனவும் தொழிற்கட்சியினர் அல்லது பசுமைக்கட்சியினரின் சொல்லைக் கேட்டு தீர்மானமெதனையும் அரசாங்கம் எடுக்கப்போவதில்லை எனவும் மேலும் குறிப்பிட்டது.

0 கருத்துக்கள் :