வன்புணர்வு செய்தவர் இவர்தான் -அடையாளம் காட்டினார் வரணி யுவதி

20.3.14

காதலனோடு ஓட்டோவில் சென்ற வேளை, ஆளரவமற்ற பகுதியில் தன்னை கூட்டுவன்புணர்வுக்கு உட்படுத்திய மூன்று காமுகர்களில் ஒருவரை இன்று அடையாளம் காட்டினார் வரணி யுவதி.

 குறித்த யுவதி தன்னுடைய காதலரோடு கடந்த வாரம் வடமராட்சி முள்ளிப்பகுதியில் ஓட்டோவில் சென்று கொண்டிருந்த போது, அவரது காதலரைத் தாக்கிவிட்டு யுவதியை மூன்று பேர் கூட்டுவன்புணர்வுக்குள்ளாக்கினர்.

 இதன்பின்னர் யுவதியும், காதலரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தனர். இந்தநிலையில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் கிடைத்த அடையாள அட்டையை ஆதாரமாகக் கொண்டு இருதயராஜ் பிரபாகரன் பிரதான சந்தேகநபரை நெல்லியடிப் பொலிஸார் கைது செய்தனர்.

 இவரை நேற்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தியபோது பாதிக்கப்பட்ட யுவதியும், அவரது காதலரும் பிரதான சந்தேகநபரை அடையாளம் காட்டினர். பிரதான சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஏனைய இரு சந்தேகநபர்களையும் பிடிக்கும் நடவடிக்கைகளை பொலிஸார் முடுக்கிவிட்டுள்ளனர்.

0 கருத்துக்கள் :