வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது

22.3.14

வவுனியா ஸ்ரீராபுரம் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களான இவர்கள் கடந்த சில வருடங்களாக வவுனியாவில் வசித்துவந்தனர்.
வட மாகாணத்தில் கடந்த சில நாட்களாக இராணுவத்தினர் தேடுதல்களையும் சுற்றிவளைப்புக்களையும் மேற்கொண்டுவருகின்றனர்.

வவுனியா நகர்ப்பகுதியில் லோகநாதன் என்ற குடும்பஸ்தர் நேற்று இரவு 7 மணியளவில்  கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் புலனாய்வு பிரிவினரால் நேற்று இரவு ஸ்ரீராமபுரம் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது  லோகநாதனின் மனைவியான லோ. மங்கலேஸ்வரி அவர்களது மகன்களான லோ.பாரதி கண்ணன் (வயது 8) மற்றும்  லோ. கண்ணன் (வயது 6) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

0 கருத்துக்கள் :