யாழ்ப்பாணத்துக்கும் பரவியது படைத்தரப்பின் கெடுபிடி

21.3.14

கடந்த சில நாள்களாக வன்னியில் நிலவிய இராணுவச்சோதனைகள் நேற்று முதல் யாழ்ப்பாணத்துக்கும் பரவின.
நேற்றிரவு குடாநாட்டின் பல பகுதிகளிலும் வழக்கத்துக்கு மாறாக படையினரின் வீதி ரோந்து நடவடிக்கைகள் அதிகரித்திருந்தன.

சைக்கிள்களிலும், கால்நடையாகவும் மாத்திரமன்றி சில இடங்களில் இராணுவ ஜீப்களிலும் படையினர் தீவிர ரோந்தில் ஈடுபட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட படையினர் இரவு நேரத்தில்  வீதிகளில் பயணிப்போரை மறித்து அடையாள அட்டைகளையும் பரிசீலித்தனர்.

 வாகனங்கள் தொடர்பான விபரங்களும் படையினரால் பதியப்பட்டன. இதனால் வன்னியில் நிலவிய பதற்றமான -போர்க்காலம் போன்ற  சூழல்- நிலைமை யாழ்ப்பாணத்திலும் பரவி, தொடரப்போகின்றதோ எனப் பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை வன்னியில் நேற்றும் பதற்றமான சூழ்நிலையே நிலவியது.பல பகுதிகளில்  படையினர் வீடு வீடாகச் சென்று அங்கிருந்தவர்களின் அடையாள அட்டைகளைச் சோதனை செய்தனர்.

0 கருத்துக்கள் :