இந்தியாவுக்கு தமிழர பிரதமராக வேண்டும் சீமானின் விருப்பம் இது

21.3.14

எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்களுக்காக, தமிழர் ஒருவர் பிரதமராவதை வரவேற்பதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். இதற்காகத் தேர்தல் களங்களில் பணியாற்றவுள்ளதாகவும் சீமான் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் பிரசாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் புதிய பிரதமர் தொடர்பில் பலவிதமான கருத்துக்களும் வெளியிடப்படுகின்றன. இந்நிலையில் சீமான் இவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன் வைகோ போட்டியிடும் கட்சியைத் தாம் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் அவரை ஆதரிக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர்  வைகோ தனித்துப் போட்டியிட்டிருந்தால் அவருக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி களம் இறங்கியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா போன்ற ஒருவர் இந்தியாவின் பிரதமரானால் அதனை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :