இளவயது திருமணத்திற்கு முயற்சித்த இருவர் கைது

2.3.14

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் சட்ட ரீதியற்ற முறையில் இளவயது திருமணத்திற்கு முயற்சித்த இருவரை களுவாஞ்சிக்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
16 வயதுடைய யுவதியையும், 24 வயுடைய இளைஞன் ஒருவனையும் இவ்வாறு கைது செய்துள்ளதாகவும், விசாரணையின் பின்னர் யுவதியினை பெற்றோரிடம் ஒப்படைத்திள்ளதாகவும், இளைஞனை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காதல் விவகாரமே இவர்களது இவ்வாறான செயற்பாட்டிற்கு காரணம் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

0 கருத்துக்கள் :