சீனா மீண்டும் அடாவடி: இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி

18.3.14

காஷ்மீரில் லேயில் இருந்து 300 கி.மீ. கிழக்கில் இந்திய-சீன எல்லையில் சுமார் அமைந்துள்ளது. இந்தப்பகுதி தனது எல்லைக்குட்பட்ட பகுதி என்று சீனா கூறி அத்துமீறி ஊடுருவ முயற்சிப்பது வாடிக்கையாகி வருகிறது.இந்த நிலையில், கடந்த 16-ந்தேதி மீண்டும் சீன ராணுவம் இங்கு அத்துமீறி நுழைய முற்பட்டுள்ளது. இதுபற்றிய தகவல்கள் இப்போதுதான் வெளிவந்துள்ளன.

சம்பவத்தன்று காலை 7 மணிக்கு சீன ராணுவத்தினர் 9 பேர் அங்கு நுழைய முயற்சித்தனர். அவர்களை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர்.

அடுத்த சில நிமிடங்களில் மேலும் 10 சீன படை வீரர்கள் குதிரைகளில் வந்து, ஏற்கனவே வந்திருந்த 9 பேருடன் இணைந்து இந்தியப் பகுதியில் நுழைய முற்பட்டனர். டைபிள் பகுதியில் வேவு பார்த்து வருமாறு தங்களுக்கு மேலிடம் உத்தரவிட்டிருப்பதாக அவர்கள் இந்தியப் படைவீரர்களிடம் கூறினர்.ஆனால் ஏராளமான இந்தியப் படைவீரர்கள் அங்கே குவிந்து விட்டனர். அதைத் தொடர்ந்து 9 மணிக்கு சீன வீரர்கள் பின்வாங்கி சென்று விட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

0 கருத்துக்கள் :