வடக்கில் இனிச் சோதனைகள் தொடருமாம் – சிறிலங்கா இராணுவப் பேச்சாளர்

21.3.14

வடக்கு மாகாணத்தில் பாதுகாப்புச் சோதனைகளை அதிகரிக்க சிறிலங்கா இராணுவம் முடிவு செய்திருப்பதாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

“விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளஒருங்கிணைக்கும் முயற்சியில், ஈடுபட்டுள்ள கோபி எனப்படும், செல்வநாயகத்தை கைது செய்யும் நோக்கிலேயே பாதுகாப்புச் சோததனைகள அதிகரிக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் தொடக்கம் வடக்கு மாகாணத்துக்குள் நுழையும் வாகனங்கள் மற்றும் வடக்கிலிருந்து வெளியேறும் வாகனங்கள் அனைத்தும் சோதனையிடப்பட்டு வருகின்றன.

அத்துடன் அடையாள அட்டைகளும் பரிசோதிக்கப்படுகின்றன.
வடக்கு மாகாணத்தில் தங்கியுள்ளதாக கருதப்படும் சந்தேகநபரைக் கைது செய்யும் வரை இந்த நடவடிக்கைகள் தொடரும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக சுற்றிவளைப்பு தேடுதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

வீடுவீடாக சிறிலங்காப் படையினர் தேடுதல்களையும் சோதனைகளையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :