புலிகளின் புதிய தலைவர் கோபியின் நெருங்கிய உதவியாளர் கைது

24.3.14

தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என கருதப்படும் கோபி எனப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜீபனின் மிக நெருங்கிய உதவியாளர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகண தெரிவித்தார்.

பயங்கரவாத புலனாய்வு பிரிவினருடன் இணைந்து இராணுவத்தினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றின் போது வட்டுகோட்டை பிரதேசத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட கோபியின் உதவியாளர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த நபரை கைது செய்து இதுவரை மேற்கொண்டுள்ள விசாரணைகளின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து சில ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துக்கள் :