பூநகரி சோலை பல்லவராயன்கட்டு பெண்களின் வாழ்வாதாரத்திற்கு சிறீதரன் எம்.பி உதவி

15.3.14

பூநகரி சோலை பல்லவராயன்கட்டு பெண்களின் வாழ்வாதாரம் கருதி தையல் இயந்திரங்களை பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வழங்கி வைத்தார்.

அண்மையில் பூநகரி ஜெயபுரம் பல்லவராயன்கட்டு சோலை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன், மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை உள்ளிட்ட குழுவினர் அங்கு மக்களின் கருத்துக்களை குறைகளை கேட்டறிந்ததுடன் அங்கு மக்களுக்கான அரசியல் விழிப்பூட்டற் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்வுகளிற்கு முழங்காவில் பகுதியின் கட்சியின் தலைவர் கோவிந்தபிள்ளை அரியநாயகம் தலைமை தாங்கினார்.
இங்கு சோலை பல்லவராயன் கட்டு மாதர் சங்கத்திற்கு பா.உறுப்பினர் சி.சிறீதரனின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் ஊடாக வழங்பட்ட தையல் இயந்திரங்கள் அப்பகுதி பெண்களிடம் வாழ்வாதார மேம்பாடு கருதி வழங்கிவைக்கப்பட்டது.
இங்கு கலந்து கொண்டவர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை,
இன்று நாம் அடைந்து கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று பொருளாதார பலமின்மை.
மிகவும் செல்வந்த நிலையிலும் தமது சொந்தகாலில் நின்று உழைத்து வாழ்ந்த பலமும் இன்று போரின்பின் பாரிய பின்னடைவு கண்டுள்ளது.
குடும்ப தலைவர்கள் போரில் கொல்லப்பட்டு விட்டார்கள். உழைப்பாளர் கூட்டம் அழிக்கப்பட்டுள்ளது. உள்ளவர்கள் அங்கவீனர்களாகவும் உள ரீதியில் பாதிப்பட்டு உள்ளார்கள்.
இந்த நிலையில் பாரிய சவால்களை எதிர்கொண்டு நமது வாழ்வை நாம் கட்டி எழுப்ப வேண்டியர்களாய் உள்ளோம். அதற்காக புலம்பெயர் உறவுகளின் ஆதரவுடன் முயன்று வருகின்றோம்.சிறுகச் சிறுக சேர்த்து நமது சந்ததியேனும் வளமுடன் வாழ எல்லோரும் பாடுபட வேண்டியது கடமையாகின்றது என்றார்.

 

0 கருத்துக்கள் :