ஐ.நா மனித உரிமைப் பேரவை தீர்மானத்தை நிராகரிக்கின்றேன்: ஜனாதிபதி

27.3.14

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானத்தை நிராகரிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்க ஆதரவு தீர்மானத்தை நிராகரிக்கின்றேன். தீர்மானத்திற்கு பதிலாக அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த தீர்மானம் நல்லிணக்கத்தை காயப்படுத்தும் வகையில் அமையும். இந்த தீர்மானம் நல்லிணக்கத்திற்கு வழியமைக்காது.
எனினும், நான் இந்த தீர்மானத்தினால் களங்கப் போவதில்லை.
ஆரம்பிக்கப்பட்ட நல்லிணக்க முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் தீர்மானத்தினை வாசிக்க இங்கே அழுத்தவும்
அமெரிக்கப் பிரேரணை 11 அதிகப்படியான வாக்குகளால் வெற்றி! இலங்கை அரசு சங்கடத்தில்
நடுநிலமை வகிப்பேன் எனக் கூறிய இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து அமெரிக்கப் பிரேரணையின் பத்தாவது பந்தியை நீக்க வாக்களித்தது. ஆனாலும் அந்தப் பிரேரணை படு தோல்வியடைந்துள்ளது.
மூன்று சுற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. அதன் பின்னர் பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகள், எதிராக 12 நாடுகள், நடுநிலையாக 12 நாடுகள் என வாக்குகள் கிடைத்ததுடன், இலங்கை மீதான பிரேரணை வெற்றியடைந்துள்ளது..
11 மேலதிக வாக்குகளினால் தீர்மானம் நிறைவேற்றம்

இலங்கைக் எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் 11 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்மானத்திற்கு ஆதரவாக 23 நாடுகள் வாக்களித்துள்ளதுடன், எதிராக 12 நாடுகள் வாக்களித்துள்ளன.
இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
இலங்கைக்கு ஆதரவாக சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் தோல்வி

இலங்கைக்கு ஆதரவாக பாகிஸ்தானினால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக பாகிஸ்தான் தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்திருந்தது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தீர்மானத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என வலியுறுத்தி பாகிஸ்தான் தீர்மானம் சமர்ப்பித்திருந்தது.

எனினும், இந்த தீர்மானம் தோல்வியைத் தழுவியுள்ளது.
தீர்மானத்திற்கு எதிராக 23 நாடுகள் வாக்களித்ததுடன் ஆதரவாக 14 நாடுகள் மட்டுமே வாக்களித்திருந்தன.
பத்து நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்-
ஆர்ஜென்ரினா, வெனின், ஒஸ்திரியா, பொஸ்சுவானா,  பிரேசில்,  சிலி, கொஸ்தரிக்கா,  கொத்து இவ்வோர்,  செக் குடியரசு,  எஸ்தோனியா, பிரான்ஸ், யேர்மனி,  அயர்லாந்து,  இத்தாலி, மெக்சிக்கோ, மொன்றிநீக்குறோ, பெரு, தென்கொரியா,  ரூமேனியா,  சியாரோலியன், மனிடோனியா,  இங்கிலாந்து, அமெரிக்கா
எதிராக வாக்களித்த நாடுகள்- அல்ஜீரியா, பாகிஸ்தான், ரஷ்யா, சவூதி அரேபியா, சீனா, கொங்கோ, கென்யா, மாலைதீவு, ஐக்கிய அரபு இராச்சியம், கியூபா, வெனிசூலா, வியட்நாம்.
நடுநிலை வகித்த நாடுகள்- இந்தியா,இந்தோனேசியா, ஜப்பான், தென் ஆபிரிக்கா 05. கஸ்கஸ்தான், குவைத், மொராக்கோ,  நமீபீயா,  பிலிப்பைன்ஸ், புர்கினா பாசோ, காபோன், எதியோப்பியா

0 கருத்துக்கள் :