கொழும்பில் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற மனோ

30.3.14

மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, கொழும்பு மாவட்டத்தில்
வாழும் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற கட்சி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

மேல் மாகாண சபைத் தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிட்டது. கொழும்பு மாவட்டத்தில் அக்கட்சி 44, 156 வாக்குகளைப் பெற்றதுடன், 2 ஆசனங்களைக் கைப்பற்றியது.

அந்த மாவட்டத்தில் போட்யிட்ட அரசியல் கட்சிகளில் ஜனநாயக மக்கள் முன்னணி 5 வது அதிகளவு வாக்குகளைப்பெற்ற கட்சியாகும்.

மேல் மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களான கம்பஹா, களுத்துறை மாவட்டங்களிலும் ஜனநாயக மக்கள் முன்னணி போட்டியிட்டு, கணிசமான வாக்குகளைப் பெற்றபோதிலும் ஆசனங்கள் எதனையும் கைப்பற்றவில்லை.

கொழும்பு மாவட்டத்தில் மொத்தமுள்ள 39 ஆசனங்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 18 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

மேல் மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் படி கொழும்பு மாவட்டத்தில் மொத்தமுள்ள 39 ஆசனங்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 18 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 12 ஆசனங்களையும் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி மூன்று ஆசனங்களையும் ஜே.வி.பி மூன்று ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

அத்துடன் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பு மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை மட்டுமே கைப்பற்றியது.

0 கருத்துக்கள் :