புழல் சிறையில் இருந்த இலங்கை மீனவர்கள் 24 பேர் விடுதலை

15.3.14

நாகப்பட்டினம் அருகே கடந்த பிப்ரவரி மாதம் 12ந் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 24 இலங்கை மீனவர்களை கடலோர காவல் படையினர் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் இவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து  காலை 9.30 மணியளவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இலங்கை மீனவர்கள் 24 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாகப்பட்டினம் கொண்டு செல்லப்பட்டனர்.

0 கருத்துக்கள் :