21 பேர் உடல் சிதறி பலி:இரட்டை குண்டு வெடிப்பு

15.3.14

பாகிஸ்தானில் பெஷாவர் மற்றும் குவெட்டா நகரங்களில் நேற்று அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. பெஷாவரில் உள்ள சிர்பாந்த் என்ற இடத்தில் பட்டா தல் பஜார் என்ற சந்தை பகுதியில் தற்கொலை படையினர் போலீஸ் வாகனத்தை குறிவைத்து நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் பலியாயினர்.

சுமார் 32க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். அதே போல் குவெட்டா நகரில் சுமார் 10 கிலோ எடையுள்ள வெடிபொருட்களுடன் வந்த தற்கொலை படை தீவிரவாதிகளின் வாகனம் ஒன்று அவ்வழியாக சென்ற பாதுகாப்பு படை வாகனத்தின் அருகே வெடிக்கச் செய்யப்பட்டதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் பலியாயினர் மேலும் 31 பேர் படுகாயமடைந்தனர்.

தலிபான்களோடு பேச்சு வார்த்தை நடத்த முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில் இந்த தாக்குதல்கள் பின்னடைவை ஏற்படுத்த செய்யும் சதி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல்களை தலிபான்கள் நடத்தியிருக்கலாம் என பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனல் தெரிவித்துள்ளன. இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 21 பேர் பலியான சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துக்கள் :