போர் இரகசியங்களை வெளியிடத் தயாராகிறார் லக்ஷ்மன் ஹுலுகல்ல? – ஐரோப்பாவில் அடைக்கலம் தேட முயற்சி.

3.2.14

பதவியில் இருந்து நீக்கப்பட்ட அரசாங்க அதிகாரி ஒருவர் போர் இரகசியங்களை வெளியிட ஐரோப்பாவுக்கு செல்ல தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தினால் அண்மையில் கலைக்கப்பட்ட அரச நிறுவனம் ஒன்றின் உயர் அதிகாரியாக பணியாற்றி இவர், ஐரோப்பிய நாடொன்றின் தூதரகத்திடம் அதற்கான சந்தர்ப்பத்தை கோரியுள்ளார்.

போர் நடைபெற்ற காலத்தில் இலங்கை இடம்பெற்ற சம்பவங்கள் குறித்த தகவல்களை வழங்க தயாராக இருப்பதாகவும் அந்த அதிகாரி உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது. போர் நடைபெற்ற காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான மிகவும் முக்கியமான தகவல்கள் தன்னிடம் இருப்பதாகவும் அதனை வெளியிட சந்தர்ப்பம் வழங்குமாறு இந்த அதிகாரி ஐரோப்பிய தூதரகம் ஒன்றிடம் கேட்டுள்ளார்.

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இந்த அதிகாரி குறித்து அவ்வப்போது பரப்பரப்பான தகவல்கள் வெளியாகி வந்தமை குறிப்பிடத்தக்கது. தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளராக இருந்த லக்ஷ்மன் ஹுலுகல்லவே இவ்வாறு போர் இரகசியங்களை வெளியிடத் தயாராகி வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

0 கருத்துக்கள் :