நோ பயர் ஸோன் மீதான தடையை நீக்குக! மன்னிப்பு சபை

24.2.14

சனல்-4 தொலைகாட்சியின் நோ பயர் ஸோன் காணொளி மீதான தடையை இந்திய தணிக்கை குழு நீக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபையின் இந்திய கிளை வலியுறுத்தியுள்ளது. இது சம்பந்தமான அறிக்கை ஒன்றை இந்திய மன்னிப்பு சபை இன்று வெளியிட்டுள்ளது. இதில், இந்திய தணிக்கை குழு நோ பயர் ஸோன் காணொளியை தடை செய்தமையானது, இந்தியாவின் கருத்து சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் மீதான மீறல் என்று சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்படுகின்ற வேளையில் அந்த அழுத்தத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் தணிக்கை குழு செயற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. கெலம் மக்ரே தயாரித்த இந்த காணொளியானது, கொடூரமான காட்சிகளை கொண்டிருப்பதாகவும், இந்திய மற்றும் இலங்கை உறவை பாதிக்கும் என்ற அடிப்படையிலும் இந்திய தணிக்கை குழு தடை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :