மன்னார் புதைகுழியில் இருந்து இன்றும் ஒரு எலும்புக்கூடு

11.2.14

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி 21 ஆவது தடவையாக இன்றைய தினம் மீண்டும் தோண்டப்பட்ட போது குறித்த புதை குழியில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளதோடு ஒரு தொகுதி மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ன தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றது. இதன் போது மேலும் ஒரு மனித எலும்புக்கூடு உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதோடு ஒரு தொகுதி மனித எச்சங்களும் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளின் தொகை 59 ஆக அதிகரித்துள்ளது.

0 கருத்துக்கள் :