கிளிநொச்சியில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

6.2.14

கிளிநொச்சி முறிகண்டி அக்கராயன் வீதியில் அமைதிபுரம் காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

கடந்த வாரம் குறித்த காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இருப்பதாக பொது மக்களால் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைத்த பின்னர் மேலதிக விசாரணைகளையும் மேற்கெண்டுவந்தனர். 

இந்த நிலையில் கடந்த இரண்டாம் திகதி குறித்த சடலம் கேகாலை இக்கிரியகல இலக்கம் 111, பாடசாலை வீதியை சேர்ந்த டி.டபிள்யு.ஜி.ரஞ்சித் பண்டார மாரப்பன (வயது 31) எனும் ஒப்பந்தக்காரருடையது என அவரது மாமனார் அபேய சாந்தகுமார அடையாளம் காட்டியுள்ளார். 

ஒப்பந்தகாரரான இவர், குறித்த பகுதியில் கிரவல் அகழ்வு ஒப்பந்தத்தை பெற்றிருந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டதாக சட்ட வைத்திய அதிகாரி சிவரூபன் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :