மாணவர்களின் கைத்தொலைபேசிகளுக்கு ஆபாச படங்கள் பதிவு செய்தவர் கைது!

5.2.14

பாடசாலை மாணவர்களின் கைத்தொலைபேசிகளுக்கு ஆபாசக் காட்சிகளை பதிவு செய்து கொடுத்து பணம் பெற்றதாகக் கூறப்படும் வீடியோ கடை உரிமையாளரொருவரை கடந்த 3 நேற்றுமுன்தினம் மாத்தளை அம்பகஹலே பஸ் நிலைய வர்த்தகத்தொகுதியில் வைத்து மாத்தறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைத்தொலைபேசிகளுக்கு இந்த வர்த்தகர் ஆபாசக்காட்சிகளை பதிவு செய்து கொடுப்பதாக மாத்தளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே பொலிஸார் இந்த சுற்றி வளைப்பை மேற்கொண்டனர்.

ஒரு கைத்தொலைபேசியில் ஆபாசக் காட்சிகளை பதிவு செய்து கொடுப்பதற்காக இந்த வர்த்தகர் 100 ரூபா அறவிடுவதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. இந்த நபரிடமிருந்து ஆபாச வீடியோ நாடாக்கள் மற்றும் கணினி உட்பட உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றினர். மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்துக்கள் :