ஜெ.வுக்கு உயர்நீதி மன்றம் கொடுத்த மூக்கறுப்பு; நகையாடும் கருணாநிதி

20.2.14

"திமுக ஆட்சியும், மத்திய அரசும் சேர்ந்து துவங்கிய திட்டம் மதுரவாயல் திட்டம். அத்திட்டத்தை பொறாமையாலோ அல்லது வழக்கமான அதிமுவின் அதிலும் குறிப்பாக ஜெயலலிதாவின் காழ்ப்புணர்ச்சியாலோ அதை நிறைவேற்றாமல் தள்ளிப்போட்டார்.

அது பற்றி அரசு செயலாளர்கள், விஞ்ஞானிகள், கட்டுமானப் பொறியாளர்கள் என்று பலர் எடுத்துக்கூறியும் ஜெயலலிதா அதை எல்லாம் காதில் வாங்கவில்லை.
 இந்நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஜெயலலிதாவுக்கு பெரிய மூக்கறுப்பு என்றே கூறலாம்.", என பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கருணாநிதி கூறியுள்ளார்.

இன்று கருணாநிதி முன்னிலையில் துவங்கப்பட்ட வேட்பாளர் நேர்காணலில், கூட்டணி குறித்து முடிவு செய்யப்பட்டதா என கேட்ட போது, "நேர்காணல் நடக்கையிலேயே கூட்டணி பற்றி முடிவு செய்யப்படுவதை பத்திரிக்கை உலக வரலாற்றில் கண்டதுண்டா?" என்ற கேள்வியை பதிலாக அளித்துள்ளார்.

0 கருத்துக்கள் :