யாழ். பல்கலைக்கழக சுற்றாடலில் இராணுவம் குவிப்பு

3.2.14

யாழ். பல்கலைக்கழக சுற்றாடலில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு முதல் பெருமளவான இராணுவத்தினர் பல்கலைக்கழகம் மற்றும் அதனை சூழ உள்ள பகுதிகளில் ஆயுதங்களுடன் நடமாடித் திரிகின்றமையினால், அச்சமடைந்த பல மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளனர்.

இதேவேளை சிறிலங்காவின் 66 ஆவது சுதந்திர தின விழா நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஏதாவது கறுப்பு கொடிக்களை கட்டினரா? என பல்கலைக்கழக மாணவர்கள் சிலரிடம் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

0 கருத்துக்கள் :