உயிர் என்னைவிட்டு பிரிவதற்குள் மகனை பார்க்கவேண்டும் என்று காத்திருந்தேன்

19.2.14

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டு 23 வருடங்களாக சிறையில் இருக்கும் சாந்தன் ( இலங்கையைச் சேர்ந்தவர் - சிவராசனின் சொந்த ஊரைச்சேர்ந்தவர்) தூக்கு ரத்து ஆகி தற்போது விடுதலை ஆகிறார்.

இந்நிலையில், இலங்கையின் யாழ் மாவட்டத்தில் உடுப்பிட்டியில் வசித்து வரும் சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி, மகன் விடுதலை செய்தி கேட்டதும் மகிழ்ச்சியில் இலங்கை தொலைக் காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.


 அவர்,  ‘’உயிர் என்னைவிட்டு பிரிவதற்குள் என் மகனைப் பார்க்கவேண்டும். கடைசிக்காலம் வரை என் மகனோடு வாழவேண்டும் என்ற ஆசையோடு இருபத்து மூன்று வருடங்களாக காத்திருந்தேன்.   சாந்தனின் ஏக்கத்தில்தான் அவனின் தந்தை மாரடைப்பால் இறந்தார்.   அவருக்கு வந்த நிலைமை எனக்கும் வந்துவிடக் கூடாது.  சாந்தனை பார்க்காமல் போய்விடக்கூடாது என்று  கடவுளை வேண்டிக் கொண்டி ருந்தேன்.  என் மகனை இத்தனை வருடமும் தொலைக்காட்சியில் காட்டும்போதுதான் பார்த்து வந்தேன்.

இப்போது அவன் விடுதலையாவது மகிழ்ச்சியாக இருக்கிறது.  என் மகனின் விடுதலைக்காக போராடிய வர்களுக்கு நன்றி.  தமிழக மக்களுக்கும், தமிழக முதல்வருக்கு நன்றி’’ என்று தெரிவித்துள்ளார்.


0 கருத்துக்கள் :