இலங்கை தமிழர் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் திமுக எழுப்பும்: டி.ஆர்.பாலு

4.2.14

நாடாளுமன்ற கூட்டத்தொடர் புதன்கிழமை கூட உள்ள நிலையில், மக்களவை சபாநாயகர் மீராகுமார் தலைமையில் டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, அரசு உயர் பதவிகளில் இடஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் திமுக எழுப்பும் என்றார்.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் பேசுகையில், அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் தெலுங்கானா மாநிலம் சார்பில் 17 எம்பிக்கள் இடம் பெறுவார்கள். சீமாந்திரா சார்பில் 25 பேர் இருப்பார்கள். தெலுங்கானா தொடர்பான பிரச்சனை புதன்கிழமை தொடங்கவுள்ளமு. நாடாளுமன்ற கூட்டத்தொடருடன் முடிவுக்கு வரும் என்றார்.

0 கருத்துக்கள் :