நவி.பிள்ளையின் பரிந்துரைகளை ஏற்க முடியாது: இலங்கை

25.2.14

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. போர் இடம்பெற்ற காலத்தில் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

  இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், உள்நாட்டு ரீதியான விசாரணைகளை சர்வதேச சமூகம் கண்காணிக்க வேண்டுமெனவும் நவனீதம்பிள்ளை பரிந்துரை செய்துள்ளார். எனினும், இந்த பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

  ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை ஒரு பக்கச் சார்பாக செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நவனீதம்பிள்ளையின் பரிந்துரைகள் அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கும் நோக்கில் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் நவனீதம்பிள்ளையினால் சமர்ப்பிக்க உள்ள அறிக்கை தொடர்பான ஆவணம் வெளியாகியுள்ளதனைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளது.

0 கருத்துக்கள் :