வன்னியில் படையினரால் அரங்கேற்றப்பட்டன கொடூரங்கள்! வெளியாகியது புலனாய்வு அறிக்கை!!

6.2.14

இறுதி யுத்த காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தினர்  தன்னிச்சையான கொலைகள், பாலியல் வன்புணர்வுகள் மற்றும் துன்புறுத்தல்கள் போன்ற விடயங்களை மேற்கொண்டார்கள் என்பதை அவுஸ்திரேலியாவின் தொண்டு நிறுவனம் ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது. 

2008 மற்றும் 2009ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் தொடர்பில் இந்த அமைப்பு புலனாய்வு விசாரணை ஒன்றை நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன் அறிக்கையின்படி,  இலங்கை இராணுவத்தினர் மிகவும் கொடூரமாக நடந்துக் கொண்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான ஆதாரங்களையும் முன்வைத்துள்ளது. யுத்த காலத்தில் இரண்டு தரப்பிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன. ஆனால் இராணுவத்தரப்பில் கட்டுப்பாடற்ற கொடூரங்கள் இடம்பெற்றுள்ளன.

யுத்த காலத்தில் இலங்கை இராணுவத்தினர் கட்டுக்கடங்காத கொடூரங்களை செய்ததுடன், தங்களின் கண்களில் பட்ட பெண்களை எல்லாம் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக வும் அந்த அறிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச ரீதியாக அதிகார பூர்வமான விசாரணை ஒன்றை முன்னெடுக்க வேண்டியது அத்தியாவசியம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஜெனீவா மாநாட்டில் அமெரிக்கா யுத்தக் குற்ற விசாரணைக்காக வலியுறுத்தி பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ள நிலையில், இந்த அறிக்கை வெளியாகியுள்ளமை, இலங்கை அரசாங்கத்தை மேலும் சிக்கலில் தள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துக்கள் :