கடாபியின் விநோத நடவடிக்கை மருந்து எவற்றின் துணையு­ மின்றி அழகு சிகிச்சை

3.2.14

மறைந்த லிபிய முன்னாள் தலைவர் கேர்ணல் கடாபி தனது அழகை மெருகூட்டுவதற்காக பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சைகள் செய்து கொள்வதில் ஆர்வம்காட்டி வந்ததாகவும், அவர் மயக்க மருந்து எவற்றின் துணையு­ மின்றி அந்த அழகு சிகிச்சைகளை செ­ய்து கொண்டதாகவும், அவருக்கு பிளாஸ்ரிக் அறுவைச் சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.

 கடாபியின் பிரேசிலைச் சேர்ந்த பிளாஸ்ரிக் சத்திர­ சிகிச்சை நிபுணரான லியசியா றிபெயிரொஸ்ஸே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
 கடாபி தோலின் சுருக்கங்களை நீக்குவதற்கும், கேசத்தை பொருத்துவதற்கும் அழகு சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

அவர் தனது அழகு சிகிச்சைகளை நிலக்கீழ் அறையில் அதிகாலை வேளையில் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
 

0 கருத்துக்கள் :