ஒபாமாவை சந்தித்தார் தலாய் லாமா : தூதரை அழைத்து கண்டித்தது சீனா

22.2.14

திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமா அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினார். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க தூதரை நேரில் அழைத்து கண்டித்தது.திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமா இரண்டு வார சுற்றுபயணமாக அமெரிக்கா வந்துள்ளார்.

அவர் நேற்று வெள்ளை மாளிகையில் அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்து பேசினார். அப்போது தலாய் லாமா விடுத்த திபெத்தியர்களின் உரிமைகள் குறித்த விவகாரத்திற்கு அமெரிக்க அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என ஒபாமா ஆதரவு தெரிவித்தார். இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், திபெத்தியர்களின் கலாசாரம், பண்பாடு, மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதில் பராக் ஒபாமா மிகவும் உறுதியாக உள்ளார்.

 தலாய் லாமாவின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு அளிக்கும் என தலாய் லாமாவோடு சந்திப்பின் போது ஒபாமா உறுதி அளித்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த சந்திப்பிற்கு சீன அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன அரசு சீனாவுக்கான அமெரிக்க தூதர் ஜான் ஹன்ட்ஸ்மேனுக்கு சம்மன் அனுப்பியது. அவரை நேரில் அழைத்து தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

 இதுகுறித்து சீன அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மிகவும் அதிருப்திகரமான ஒன்றாகும். சீனாவின் வெளியுறவு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதன் மூலம் அமெரிக்கா, சீனா இடையிலான உறவுகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது என்று தனது எதிர்ப்பை உடனடியாக தெரிவித்தது.

0 கருத்துக்கள் :