தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல்

20.2.14

ராஜீவ் கொலை குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட  மொத்தம்  7 பேரை விடுதலை செய்வதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா  நேற்று அறிவித்தார்.
 இந்த முடிவிற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.இதனிடையே தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.

 இந்நிலையில் இந்த விவகாரத்தில் தமிழக அரசின் முடிவை எதிர்த்து தற்போது மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.பிற்பகல் 12:45 மணிக்கு மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 
  
முன்னதாக பேரறிவாளன் உள்ளிட்ட ‘7  பேரையும் விடுவிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு 3 நாளில் முடிவெடுக்காவிட்டால்,  தமிழக அரசே அவர்களை சிறையில் இருந்து விடுவிக்கும்’ என்றும் ஜெயலலிதா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :