மூத்த பெண் ஊடகவியலாளர் மெல் குணசேகர கொழும்பில் படுகொலை

2.2.14

சிறிலங்காவின் மூத்த பெண் ஊடகவியலாளரான மெல் குணசேகர, பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். 46 வயதான மெல் குணசேகர, ஏ.எவ்.பியின் கொழும்பு செய்தியாளராக முன்னர் பணியாற்றியவர். அத்துடன் சண்டே ரைம்ஸ் வார இதழிலும், லங்கா பிஸ்னஸ் ஒன்லைன் ஊடகத்திலும் இவர் பணிபுரிந்துள்ளார். தற்போது, பிட்ச் ரேட்டிங் லங்கா நிறுவனத்தின் துணைத் தலைவராக பணியாற்றி வந்த நிலையிலேயே, இன்றுகாலை வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது தாயும் சகோதரனும், தேவாலயத்துக்குச் சென்று திரும்பிய போது மெல் குணசேகர, சமையலறையில் கூரிய ஆயுதத்தினால் வெட்டப்பட்ட காயங்களுடன் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மெல் குணசேகர, அரசியல் மற்றும், வர்த்தக விவகாரங்களில் செய்திகள், ஆயவுகளை எழுதி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


0 கருத்துக்கள் :