பின் வாங்கியது பிரித்தானியா: இலங்கைக்கு எதிரான யோசனை இல்லை

17.2.14

எதிர்வரும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா இலங்கைக்கு எதிராக எவ்வித யோசனை வரைபையும் சமர்ப்பிக்காது என்று பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகம் உறுதியளித்துள்ளது.

பிரித்தானியாவில் வாழும் இலங்கையை சேர்ந்த கன்சவேட்டிவ் கட்சி உறுப்பினர்களிடம் இந்த உறுதியை குறித்த அலுவலகம் வழங்கியுள்ளது.
இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. எனினும் அவை மிகவும் மந்தக்கதியில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

எனினும் இலங்கைக்கு எதிராக எவ்வித யோசனைகளையும் பிரித்தானியா சமர்ப்பிக்காது என்று கன்சவேட்டிவ் கட்சியின் இலங்கை நண்பர்களின் தலைவர் லயனல் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பிரித்தானியாவில் வாழும் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுவினர் பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தை சந்தித்து பேச்சு நடத்தினர்.
இதன்போது இலங்கைக்கு எதிராக பயண தடைகளை விதிக்க வேண்டும் என்று தமிழர்களுக்கான நாடாளுமன்றக்குழு கோரியிருந்தது.

இந்தநிலையிலேயே கன்சவேட்டிவ் இலங்கையின் நண்பர்கள் பொதுநலவாய அலுவலக அதிகாரிகளை சந்தித்துள்ளனர்.

0 கருத்துக்கள் :