இலங்கையில் ஊழல் மோசடிகள் பகிரங்மாகவே இடம்பெறுகின்றன!- சரத் பொன்சேகா

13.2.14

இலங்கையில் உழல் மோசடிகள் பகிரங்கமாகவே இடம்பெறுவதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்களை அரசாங்கம் பாதுகாக்கின்றது.
இந்த ஆட்சியாளர்கள் துரத்தி துரத்தி எமது மக்களையே தாக்குகின்றனர்.
நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது எனது மகளின் கணவரை இந்த நாட்டின் தலைவர் பழிவாங்கினார்.

இந்த நாட்டில் ஊழல் மோசடிகள் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன.
சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் துஸ்பிரயோகம் போன்றவற்றில் ஈடுபடுவோரை பாதுகாக்க முதலாவதாக குரல் கொடுப்பது ஆட்சியாளர்களே.
இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிப்போர் அனைவரும் திருடர்கள் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மொரட்டுவையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :