முல்லைத்தீவு மூங்கிலாற்றில் மனித புதைகுழி, 9 எலும்புக்கூடுகள் மீட்பு! (காணொளி)

28.2.14

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் காணப்பட்ட மனித புதைகுழியை அடுத்து முல்லைத்தீவு பகுதியில் ஒரு மனிதப் புதை குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உடையார் கட்டு மூங்கிலாறு பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியொன்றில் இருந்து 9 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான தகவல் கிடைத்ததை அடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றிருப்பதுடன், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன், குறித்த பகுதிகளில் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், தற்போது முல்லைத்தீவிலும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

0 கருத்துக்கள் :