சனல்4 ஊடகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை இல்லை: இலங்கை அரசாங்கம்

5.2.14

இலங்கை மீது போர்க்குற்றச்சாட்டை சுமத்தி வரும் சனல்4  ஊடகத்திற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் நிலைமையை சீர்செய்ய ஏனைய நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக, வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சனல்-4 வின் குற்றச்சாட்டுக்கு, இலங்கை அரசாங்கம் உரிய பதிலை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :