கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு பஸ் தீப்பற்றியது; 41 பயணிகள் தப்பினர்

13.2.14

கட்டுநாயக்க - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சொகுசு பஸ் ஒன்று இன்று காலை தீக்கிரையாகியுள்ளது. கொழும்பிலிருந்து கட்டுநாயக்க  நோக்கிச் சென்று கெண்டிருந்த இந்த பஸ் பமுனுகமை பொலிஸ் பிரிவுக்கு  இடத்தில் தீப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க நெடுஞ்சாலை தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்த போதிலும் பஸ் முழுமையாக தீக்கிரையாகி விட்டதாகவும் தெரிவித்தனர்.

 குறித்த பஸ்ஸில் 41 பயணிகள் பயணித்ததாகவும் சாரதி உட்பட பயணிகள் எவருக்குமோ, நெடுஞ்சாலைக்கோ எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை. அவர்கள் தெரிவித்தனர். இயந்திரக் கோளாறு காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் மேலதிக விசாரணைகளை  பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

0 கருத்துக்கள் :