4 வயது மகள் அடித்துக்கொலை - தந்தை கைது

3.2.14

சென்னை பம்மல் அருகே 4 வயது மகள் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தந்தை கைது செய்யப்பட்டார்.

 பல்லாவரம் சங்கர்நகர் அருகே நாகல்கேணி மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர். இவர் கூலி வேலை செய்து வருகிறார். சங்கரின் மனைவி தமிழரசி. இத் தம்பதியின் மகள் ஜோதிலட்சுமி (4). சங்கர் குடும்பத்துக்கும், அவர் மாமியார் குடும்பத்துக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாம்.

 இந்நிலையில் அருகில் சங்கரின் மாமியார்,ஜோதிலட்சுமி கடந்த சனிக்கிழமை விளையாடி விட்டு வீட்டுக்கு வந்தாள். அப்போது அங்கு இருந்த சங்கர், ஜோதிலட்சுமியை கண்டித்தாக கூறப்படுகிறது. இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சங்கர்,ஜோதிலட்சுமியை அடித்து உதைத்து கீழே தள்ளினாராம்.

 இதில் பலத்த காயமடைந்த ஜோதிலட்சுமி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு ஜோதிலட்சுமி திங்கள்கிழமை இறந்தார்.

 இது குறித்து சங்கர்நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சங்கரை கைது செய்தனர்.

0 கருத்துக்கள் :