24 வருடங்கள் கடந்து மரணதண்டனை! இலங்கை நீதித்துறை சாதனை!!

7.2.14

விடுதலைப்புலிகளது சிறுவர் போராளியாக இருந்த வேளையினில் கைதான நபரொருவருக்கு 24 வருடங்களின் பின்னதாக இன்று திருகோணமலை மேல்நீதிமன்றம் மரணதண்டனை தீர்ப்பளித்துள்ளது. திருகோணமலை ஆலங்கேணி பகுதியை சேர்ந்தவரான தங்கராசா சிவகந்தராசா( வயது 38) என்பவருக்கே இன்று மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

1990 ம் ஆண்டினில் திருகோணமலை கடற்பரப்பினில் ஆறு பொதுமக்களினை விடுதலைப்புலிகளுடன் இணைந்து வெட்டிக்கொலை செய்ததாக இவர் மீது நீதிமன்றினில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. சீனன் குடா கடற்படை தளத்தினை அண்டிய பகுதியினில் அவர் சிறைப்பிடிக்கப்பட்ட வேளை அவரது வயது வெறும் 14 மட்டுமேயாகும். சுமார் 14 வருடங்கள் சிறையினில் வைக்கப்பட்டிருந்த அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையினில் அவர் பிணையினில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் வாரத்தின் ஞாயிற்றுக்கிழமைகளினில் திருகோணமலை பொலிஸ் நிலையத்தினில் ஒப்பமிட பணிக்கப்பட்டுமிருந்தார். இந்நிலையினில் இன்று வழக்கு விசாரணையின் போதே அவருக்கு மரணதண்டனை தீர்ப்பளித்து திருகோணமலை மேல்நீதிமன்றம் அவரை மீண்டும் சிறையினில் அடைத்துள்ளது.

பிணையினில் விடுவிக்கப்பட்ட நிலையினில் அவர் திருமணம் செய்துகொண்டிருந்தார்.சிறுவர் போராளியாக இருந்த வேளை கைதான அவரிற்கு சுமார் 24 வருடங்களின் பின்னர் மரணதண்டனை தீர்ப்பளித்து இலங்கை நீதித்துறை சாதனை புரிந்துள்ளது.

0 கருத்துக்கள் :