1200 ரூபா பணத்துக்காகவே ஊடகவியலாளர் மெல் குணசேகர படுகொலை?

4.2.14

ஏஎவ்பியின் முன்னாள் கொழும்பு செய்தி முகவரான மெல் குணசேகர, 1200 ரூபா பணத்துக்காகவே கொலை செய்யப்பட்டுள்ளதாக, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும், சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் காலை, வீட்டில் தனித்திருந்த போது, மெல் குணசேகர கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து, அன்று மாலையே, வர்ணப்பூச்சு தொழில் செய்யும் ஒருவரை சந்தேகத்தின் பேரில் சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர், மெல் குணசேகரவின் வீட்டில் சில மாதங்களுக்கு முன்னர் வர்ணம்பூசும் பணியில் ஈடுபட்டவராவார்.

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, மெல் குணசேகரவை கொன்று விட்டு, வீட்டில் இருந்த 1200 ரூபா பணத்தை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.
அந்தப் பணத்தைப் பயன்படுத்தி அவர் மதுபானம் வாங்கியுள்ளார்.
இவர் கைது செய்யப்பட்ட போது மீதியான 790 ரூபா பணமும் மீட்கப்பட்டது.

இவரிடம் இருந்து மெல் குணசேகரவின் பிளாக்பெரி கைபேசியும் மீட்கப்பட்டுள்ளது.
ஆனால் அதைப் பயன்படுத்தும் முறையை அவர் அறிந்திருக்கவில்லை.

கொலை செய்த போது இரத்தக்கறை படிந்த மேற்சட்டையையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இதற்கிடையே, கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மெல் குணசேகரவின் இறுதிச்சடங்கு இன்று பிற்பகல் 4.30 மணியளவில் கனத்தையில் நடைபெறவுள்ளது.

0 கருத்துக்கள் :