கோர விபத்து 10 குழந்தைகள் பலி! 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம்

6.2.14

கர்நாடக மாநிலம் ஹுப்ளி அருகே பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற லொறி  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம் அடைந்தனர். சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த குழந்தைகள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விதிமுறைகளை மீறி லொறியில் குழந்தைகளை ஏற்றிச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துக்கள் :