இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கும் தயார் நிலை

25.1.14


எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கும் தயார்நிலை காணப்படுவதாக ராஜதந்திர வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன

ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக சுயாதீன சர்வதேச விசாரணைகளை நடத்தும் யோசனை நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த யோசனை நிறைவேற்றப்பட்ட பின்னர் இலங்கை சம்பந்தமாக ஆராய 6 மாத கால அவகாசம் வழங்கப்பட உள்ளது.

குறித்த காலப் பகுதியில் நியமிக்கப்படும் சுயாதீன விசாரணை குழு ஊடாக இலங்கை தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டாவது நடவடிக்கையாக 6 மாதங்களுக்கு பின்னர் வெளியிடப்படும் விசாரணை அறிக்கையை அடிப்படையாக கொண்டு இலங்கை எதிராக பொருளாதார தடைகளை விதிக்கும் தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவித்தன.

0 கருத்துக்கள் :