ஜனாதிபதி-தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இவ்வாரம் சந்தித்து பேச்சு

19.1.14

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குமிடையில் இந்த வாரம் அவசர சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக ஆங்கில பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகளின் மாநாடு குறித்தும் வடக்கின் தற்போதைய நிலை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா ஆகியோர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்பியிடம் கேட்ட போது இது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாதெனத் தெரிவித்தார். இரா.சம்பந்தன் எம்பி இந்தியா சென்றுள்ள நிலையிலும் மாவை சேனாதிராஜா வெளிநாடு சென்றுள்ள நிலையிலும் இந்த சந்திப்பு சாத்தியப்படாது எனவும் அவர் தெரிவித்தார்

0 கருத்துக்கள் :