தமிழகத்தில் ஜி.ராமகிருஷ்ணனை சந்தித்த சம்பந்தன்,

4.1.14

தமிழகத்திற்கு சென்றுள்ள, இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று (04) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் ஜி,ராமகிருஷ்ணனை சந்தித்தார்.

அப்போது மத்தியக்குழு உறுப்பினர்கள் அ.சவுந்திரராசன், பி.சம்பத், செயற்குழு உறுப்பினர்கள் பி.செல்வசிங், க.கனகராஜ் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.ஆறுமுக நயினார், ஆர்.கோவிந்தராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

செப்டம்பர் மாதம் நடைபெற்ற வட மாகாண சபைத் தேர்தலுக்கு பிந்தைய நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பில் சம்பந்தன் விளக்கியுள்ளார்.

அத்துடன் இலங்கைத் தமிழ் மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைபாடுகள் குறித்தும் அவர் விளக்கியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

0 கருத்துக்கள் :